முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம்: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின. இதனிடையே எஸ்.வி. சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று உறுதி செய்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து