முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      விளையாட்டு
2-Ram-58

Source: provided

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேக்ஸ்வெல் வீடியோ வைரல்

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் முன்ரோ தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணி, ஸ்டோய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்சை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.1 ஓவர்களில் 153 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பிரிஸ்பேன் அணி பேட்டிங் செய்தபோது 17-வது ஓவரை டேனியல் லாரன்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பிரெஸ்ட்விட்ஜ் அதனை அதிரடியாக அடித்தார். அனைவரும் அதனை சிக்சர் என்று நினைத்தனர். ஆனால் எல்லைக்கோட்டின் அருகே பீல்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல் தாவிச்சென்று பந்தை சிக்சரில் இருந்து தடுத்து எல்லைக்கு உள்ளே தட்டிவிட்டு அபாரமாக கேட்ச் செய்தார். இதனை பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை ஆறுதல் வெற்றி 

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.இறுதி கட்டத்தில் சக்காரி பவுல்க்ஸ் 21 ரன்கள் போராடியும் பலனில்லை. நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அசலன்கா 3 விக்கெட்டுகளும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகல்

வங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார். இதனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஷாண்டோ, வங்காளதேசத்தின் 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார்.  

முன்னதாக 3 வடிவிலான அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஷாண்டோ விலக முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது டி20-லிருந்து மட்டும் விலகியுள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக தொடருவார் என்று கூறப்படுகிறது.

காம்ப்ளியின் பரிதாப நிலை

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து