முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேயில் மரண தண்டனைக்கு எதிரான சட்டமசோதா நிறைவேற்றம் 60 கைதிகளின் மரண தண்டனை ரத்து

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      உலகம்
Jail-1

Source: provided

ஹராரே: மரண தண்டனைக்கு எதிரான சட்டமசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார்.

1960-களில் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்டவரான எம்மர்சன் மனங்காக்வா, மரண தண்டனை முற்றிலுமான ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். மேலும் பொது மன்னிப்பு வழங்கும் அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வந்தார்.

இந்த நிலையில் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, மரண தண்டனை ரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு அதிபர் எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து