முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி போனஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024      சினிமா
Diwali-Bonus-Review 2024-10

Source: provided

மதுரை மாவட்டம் நிலையூர் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசிக்கும் நாயகன் விக்ராந்த், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில் தனது நிறுவனத்தின் தீபாவளி போனஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.  ஆனால், எதிர்பார்த்தது கிடைக்காமல் போக, வேறு ஒரு முயற்சியில் இரங்குகிறார். அந்த முயற்சி அவரை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது. 

அதில் இருந்து விக்ராந்த் மீண்டாரா, குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடினரா என்பதை சொல்கிறது இந்த தீபாவளி போனஸ்’. விக்ராந்த், சாதுவான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். மனைவியாக வரும் ரித்விகா, எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார். சிறுவன் ஹரிஷ், தன் சோர்வடைந்த முகத்தின் மூலம் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மரிய ஜெரால்டுவின் இசை அருமை. 

திருப்பரங்குன்றத்தின் அழகை  காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம். வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும், வறுமை மாறாமல் இருக்கும் எளிய மக்கள் தீபாவளி பண்டிகை நாட்களில் கூட தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய கஷ்ட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நேர்த்தியாகவும் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபால்.ஜெ. மொத்தத்தில், இப்படம் எளிய மக்களின் தீபாவளி கொண்டாட்டம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து