முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட்டுக்கான நிலுவை தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்காதது ஏன்?: காங். கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Jairam-Ramesh 2023 07-16

Source: provided

புதுடெல்லி : ஜார்க்கண்ட் மாநில மக்களிடம் வாக்குகள் கேட்கும் முன்பு அம்மாநிலத்துக்கு கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி ராயல்டி தாமதத்துக்கு பா.ஜ.க. பதில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

நிலக்கரி ராயல்டி மற்றம் மத்திய அரசு திட்டப் பலன்கள் என பல லட்சம் கோடி ரூபாய், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கங்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் துணைநிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அது அம்மாநிலத்துக்கு மிகப்பெரும் அளவிலான தொகையை நிலுவையில் வைத்துள்ளது.

நிலங்களுக்குகான இழப்பீட்டுகாக ரூ.1,01,142 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. பொதுவான நிலுவைத் தொகையாக ரூ.32,000 கோடியும், எடுக்கப்பட்ட நிலக்கரிகளுக்கான ராயல்டியின் கீழ் ரூ.2,500 கோடியும் வழங்கப்படாமல் உள்ளது.

உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் ஏன் இந்த நிதிகளை இதுவரை விடுவிக்கவில்லை? அம்மாநில மக்கள் ஜெ.எம்.எம். - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்ததால் அவர்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுகிறதா? மாநில பா.ஜ.க. தலைமையால் ஏன் மாநிலத்துக்கு எந்த நிதியையும் பெற்றுத் தர முடியவில்லை.

ஜார்க்கண்ட் மக்களிடம் வாக்கு கேட்பதற்கு முன்பு, மாநிலத்துக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பா.ஜ.க. பதில் கூறவேண்டும்.  இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து