முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னியில் காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு : சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Appavu 2024-11-06

Source: provided

சிட்னி : சிட்னி நகரில்  நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில்  சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். 

நேற்று 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நேற்று முன்தினம் சிட்னி நகருக்கு சென்றடைந்தார். நேற்று சிட்னி நகரில் டார்லிங் ஹார்பர் சர்வதேச மாநாட்டு மையத்தில் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு தொடங்கியது. 

பின்னர், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு - வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா உட்பட பல்வேறு காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற/சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் கலந்து கொண்டு, சுருக்கமாக கருத்துக்களை தெரிவித்தனர்.

காமன்வெல்த் பாராளுமன்ற தமிழ்நாடு கிளையின் சார்பாக இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசுகையில்,

செயற்கை நுண்ணறிவுமூலம் தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும், இச்சிறப்புமிக்க மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

முன்னதாக, பேரவைத் தலைவர் அரசு முறைப் பயணமாக மலேசிய நாட்டிற்கு சென்றிருந்தார். மலேசியா நாடாளுமன்றத்தின் தலைவர் ஜோஹாரி அப்துல், துணை அமைச்சர் குலசேகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, மலேசியா நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்திலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டார். அப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரின் வருகை குறித்து அறிவித்ததும், உறுப்பினர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து