முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு : தமிழ்நாடு அரசு தகவல்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : 35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கள ஆய்வில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் பலரும் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்தார். 

முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப் பட்டிருந்த கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.  இதன்மூலம் 35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 மணிநேர கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நில எடுப்பு விடுவிக்கப்பட்டு நில உரிமைக்கான ஆணையைப் பெற்றுக் கொண்ட பலரும் முதல்வரை வெகுவாகப் பாராட்டியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து