முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் ரூ. 6,640 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Modi 2024-11-15

Source: provided

ஜமுய்(பீகார்) : பிரதமர் நரேந்திர மோடி பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் இருந்து ரூ. 6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நேற்று நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

மேலும், பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் எனும் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் கிரஹ பிரவேச நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

 பி.எம். ஜான்மான் திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும், தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக  30 கூடுதல் நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் 10 ஏகலவ்ய மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும், 300 வளர்ச்சி கேந்திராக்களையும் அவர் திறந்து வைத்தார்.  

அதை தொடர்ந்து பழங்குடியினர் பகுதிகளில் 500 கி.மீ. புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  பிரதமர்-ஜன்மனின் கீழ் 25,000 புதிய வீடுகளுக்கும், தாஜ்குவா திட்டத்தின் கீழ் 1.16 லட்சம் வீடுகளுக்கும், பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  மோடி, நாட்டின் சுதந்திரம் மற்றும் வரலாற்றில் பழங்குடி மக்களின் பங்களிப்பை யார் மறப்பார்கள்? பழங்குடியினப் பெண்ணான திரவுபதி முர்முவை இந்திய ஜனாதிபதியாக்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிர்ஷ்டம். நிதிஷ் குமார் கூட அவரது வேட்புமனுவை முழுவதுமாக ஆமோதித்தார்.

பழங்குடியினர் நலம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை. நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம். 

நாட்டில் இரண்டு பழங்குடியினர் மத்திய பல்கலைக் கழகங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இதற்கு முன் ஒரே ஒரு பழங்குடி மத்திய பல்கலைக் கழகம் மட்டுமே இருந்தது என குறிப்பிட்டார்.

கடந்த மூன்று நாட்களில் பீகாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பயணம் இதுவாகும். கடந்த 13-ம் தேதி அன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்கும் அவர் தர்பங்காவுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து