முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்ற இறக்கத்தோடு நிறைவு பெற்ற இந்திய பங்குச்சந்தை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      இந்தியா
stock-market 2023 06 28

Source: provided

மும்பை: இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 26.35 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 532.70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 91.20 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 179.55 புள்ளிகளில் நிறைவடைந்தது.

110.64 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 580.31 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல, 61.90 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 200.30 புள்ளிகளிலும், 29 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 100.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, நெஸ்லே, இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை லாபத்தில் கைமாறின.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 2,502.58 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 6,145.24 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என்று பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய சந்தைகளில், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் குறைவாக நிலைபெற்றன, சியோல் நேர்மறையான பிரதேசத்தில் முடிந்தது. ஆசிய பங்குச்சந்தைகளான டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது என்றாலும், சியோல் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்வில் நிறைவடைந்தன. அமெரிக்க பங்குச்சந்தை நேற்று முன்தினம் ஏற்ற இறக்கத்தோடு நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து