முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: சென்னையில் நேற்று முதல் (நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., ஏற்கெனவே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில், சுழற்சி முறையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்;

இந்நிலையில் நேற்று முதல் (நவ. 14) எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே. நகர் அரசு மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில்  புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்துப்பட்டு. சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜிக்கு புதன்கிழமை கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

காவல்துறை தரப்பில், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும், ஒவ்வொரு பூத்திலும் 10 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து