முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 8 முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      விளையாட்டு
14-Ram-50

Source: provided

செஞ்சூரியன்: சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் எட்டு முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் ஒரே ஆண்டில் ரோகித் சர்மா, சஞ்ச சாம்சன் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் சதம் அடித்தும் சாதனை படைத்துள்ளனர்.

சுற்றுப்பயணம்... 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.

220 ரன்கள் இலக்கு...

இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உலக சாதனையை...

முன்னதாக இந்த ஆட்டத்தையும் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் இந்தியா 8 முறை 200+ ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக முறை 200+ (8) ரன்கள் அடித்த முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் பர்மிங்காம் பியர்ஸ் (2022), இந்தியா (2023) மற்றும் இந்தியா (2023) ஆகிய அணிகள் தலா 7 முறை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள இந்தியா முதல் அணியாக உலக சாதனையை படைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து