முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார். 2 மாவட்டங்களிலும் 10 ஆயிரம் பேருக்கு ரூ.70 கோடி மதிப்பில்அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். மேலும் ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சுற்றுப்பயணம்... 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்து முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ரூ.ஆயிரம் கோடி...

இதற்காக நேற்று (14-ம் தேதி) மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கோண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் இன்று (15-ந்தேதி) காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 131 ஏக்கர் பரப்பளவில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

முதன் முதலாக... 

பின்னர் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தினை தமிழ்நாட்டில் முதன் முதலாக இங்கு தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு செந்துறை சாலை கொல்லாபுரம் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.

திமுக நிர்வாகிகள்... 

அதன் பின்னர் மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணி அளவில் துரை மங்கலம் சாலை வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள பூமனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

பிரமாண்ட வரவேற்பு... 

இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முன்னதாக பெரம்பலூர் வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் மேலமாத்தூர் பகுதியிலும், வேப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குன்னம் பகுதியிலும், பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் நான்கு ரோடு ஆகிய பகுதிகளிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்... 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் ஆகியோர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விழா மேடை அமைப்பு குறித்து கேட்டறிந்தார்கள். தொடர்ந்து பெரம்பலூர் பூமணம் திருமண மண்டபம் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து