முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து தமிழக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து நேற்று ஒருநாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் தமிழக அரசு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மருத்துவர்களின் 15 அம்ச கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தது. இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை கைது செய்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில்,

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ரோந்து காவலர்களை பயன்படுத்தி மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை முதல்வர்கள், பொறுப்பாளர்கள் உடன் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து