முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு: காங்கிரஸ் கட்சி கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

ஜம்மு: காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்திரபதி சம்பாஜி நகரில் பேரணியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது, பாகிஸ்தான் மொழியைப் பேசும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மகாராஷ்டிர மக்கள் ஆதரிப்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள்.

பாஜக தலைமையிலான மஹாயுதி அரசு, அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் எனப் பெயர் மாற்றம் செய்து, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றியது. இந்த நகரத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாலாசாகேப் தாக்கரேவால் எழுப்பப்பட்டது என்பது முழு மகாராஷ்டிராவுக்கும் தெரியும். இந்த முடிவை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடியது.

மகாவிகாஸ் அகாதி அரசு இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தது. ஆனால் காங்கிரஸின் அழுத்தத்தால் நகரத்தின் பெயரை மாற்றும் தைரியம் அதற்கு இல்லை என்றார். மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. மக்களின் தலையெழுத்தை மாற்றுவது. இந்தத் தேர்தலில் ஒருபக்கம் சாம்பாஜி மகாராஜாவை நம்பும் தேசபக்தர்களும், மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர். மஹாயுதி இருந்தால் மகாராஷ்டிரத்தில் முன்னேற்றம். மராத்திக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர மற்றும் மராத்வாடா மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து