முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் : ஊட்டியில் இயக்க பரிசீலனை

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Hydrogen-train 2024-11-15

Source: provided

திருப்பதி : தண்ணீரில்  இயக்கப்படும் ஹைட்ரஜன்  ரயிலை விரைவில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா - சிம்லா போன்ற மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஹைட்ரஜன் ரயில்கள் 2018-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அது போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.

இந்த ரயிலை இயக்க ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அதனால் நீராவி மட்டுமே வெளியேறுகிறது.

இந்த ரயிலை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சப்தமும் மிகக் குறைவு. ஒரு முறை எரிபொருள் தொட்டியை நிரப்பினால், அது 1000 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும்.

முதலில் அரியானாவில் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா - சிம்லா போன்ற மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளன.

ஒவ்வொரு ஹைட்ரஜன் ரயிலையும் உருவாக்க ரூ. 80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து