முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      தமிழகம்
Vaiko 2024-05-02

சென்னை, வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மே மாதம் 25-ந்தேதி நெல்லை மாவட்டத்துக்கு சென்றார். அங்கு வீட்டின், திண்ணையில் ஏறும்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அதே மாதம் அறுவை சிகிச்சை செய்து தோளில், 'டைட்டானியம் பிளேட்' பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், தோளில் பொருத்தப்பட்ட 'டைட்டானியம் பிளேட்' அகற்றுவதற்காக வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிளேட் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தற்போது வீடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து