முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

புதுடெல்லி : காங்கிரசில் இருந்து விலகிய டெல்லியின் சீமாபுரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீர்சிங் திகன் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஆம் ஆத்மி கட்சி  தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில்  தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்து கொண்டார். 

டெல்லியின் சீமாபுரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 3 முறை வெற்றி பெற்றவர் வீர் சிங் திகன். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான வீர் சிங் திகன் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 

ஆம் ஆத்மி கட்சி  தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் வீர் சிங் திகன் அக்கட்சியில் இணைந்தார்.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் சீமாபுரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக வீர் சிங் திகன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஆம் ஆத்மியை சேர்ந்த ராஜேந்திர பால் கவுதம்  அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து