முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேராடூனில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழப்பு : பார்ட்டி வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Dehradun 2024-11-15

Source: provided

டேராடூன் : டேராடூனில் சொகுசு கார் ஒன்றின் மீது டிரக் மோதி விபத்துக்கு உள்ளானதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். 

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனின் ஒ.என்.ஜி.சி. சவுக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக சென்ற மாணவர்களின் சொகுசு காரின் பின்னால் ட்ரக் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சொகுசு கார் நொறுங்கியது. அதில் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள் சாலையில் சிதறியிருந்தன. இதுகுறித்த வீடியோ  வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இப்பயங்கர நிகழ்வில் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். அவர், சித்தேஷ் அகர்வால் (25) என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களில் சித்தேஷின் ஐ போன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர கால அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. இதனால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்த பயங்கர விபத்து நடப்பதற்கு முன்பு உயிரிழந்தவர்கள் விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவர்கள் கையில் கோப்பைகளுடன், இசைக்கு ஏற்றவாறு ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோப்பைகளில் இருந்தது மதுபானம் போல தெரிகிறது.

இந்த வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுவின் தாக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்றும் காரினை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்பதால் அவர்கள் மதுவின் ஆதிக்கத்தி்ல் இருந்தனரா என்பதை போலீசார் உறுதிபடுத்தவில்லை. அதே போல் உயிரிழந்தவர்கள் எங்கு படித்து வந்தனர் என்பதையும் போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து