முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் அனுரகுமார முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      உலகம்
Sri-Lanka 2024-11-18

கொழும்பு, அதிபர் முன்னிலையில் இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அதிபர் அநுர குமார திசாநாயக முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் நேற்று காலை ஹரிணி அமரசூர்ய மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்று அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபர் அனுரகுமார நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக இருந்த ஹரிணி அமரசூர்ய, மீண்டும் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜிதா ஹெராத் உள்ளிட்டோர் அதிபர் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். பெண்கள் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஹரிணி, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து