முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆராய்ச்சி கல்வி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் : போராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

Source: provided

சென்னை : ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டம், பதக்கங்கள் வழங்கினார். அப்போது பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர் ஆ.பிரகாஷ், ஆளுநரிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களிடம் வழிகாட்டி பேராசிரியர்கள் நகை, பணம் பெறுவதாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும், விடுதிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் முனைவர் பட்டத்திற்காக பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேகைளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலை.களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து