முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் தூக்கமின்றி தவிப்பு: நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      சினிமா      தமிழகம்
Kasthuri 2024-11-18

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் சிறையில் தூக்கமின்றி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இவ்வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து