முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா
Amazon 2024-11-18

Source: provided

பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவின் சிலிகான் வேலே என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமானம் நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இதன்மூலம் வாடகை செலவை வெகுவாக குறைக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

இந்த டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதமான ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும். இந்த இடமாற்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து