முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா
Adishi 2024-11-18

புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

டெல்லி நகரில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில், காற்றின் தரக் குறியீடு 484 புள்ளியாக பதிவாகியுள்ளதால், மிக கடுமை பிரிவாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தேசியத் தலைநகா் டெல்லியில் காற்றின் தரம் மிக கடுமையான பிரிவுக்கு சென்றதால், மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-4 கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நச்சுப்புகை மூட்டத்தால் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை, மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காற்றுமாசு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அதிஷி பேசியதாவது: "அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த வட இந்தியாவும் மருத்துவ அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி, சண்டீகர், ஜெய்ப்பூர், போபால், பாட்னா, லக்னெள உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம், மோசம், கடுமை, மிகக் கடுமை பிரிவில் உள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளது. இன்று, நாட்டு மக்களால் மூச்சுகூட விட முடியவில்லை. ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் அல்லது மத்திய பிரதேச மாநிலங்களின் எல்லா இடங்களிலும் விவசாயக் கழிகள் எரிப்பதைக் காணலாம். மத்திய அரசு என்னதான் செய்து கொண்டுள்ளது. நாட்டில், விவசாயக் கழிவுகள் எரிப்பதைக் குறைத்துள்ள ஒரே மாநிலம் பஞ்சாப். தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு மொத்தமாக 71,300 இடங்களில் எரிக்கப்பட்டன, ஆனால், கடந்தாண்டு 36,650-ஆக குறைக்கப்பட்டது. இந்தாண்டு பஞ்சாபில் 8,404 மட்டுமே பதிவாகியுள்ளது.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டை காட்டிலும், விவசாயக் கழிவுகள் எரிப்பு 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் அதிகரித்துள்ளது. விவசாயக் கழிவுகள் எரிப்பதை பஞ்சாப் அரசு 80 சதவிகிதம் வரை குறைத்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் மட்டும் அதிகரிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து