முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் தகவல்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      உலகம்
Israel 2024-11-25

Source: provided

 

ஜெருசலேம்ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மறுநாளில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது. தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியதுடன் தரைவழி தாக்குதலும் நடத்தியது. இந்த சண்டையில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நீடிக்கிறது.

இந்நிலையில், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெர்சாக் கூறி உள்ளார். தூதர் மைக் ஹெர்சாக் இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா ஒப்பந்த விதிகளை மீறினால், நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை வழங்கவேண்டும் என்று இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகளை தெற்கு லெபனானில் இருந்து வெளியேற்றவேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து