முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த தந்தையின் வேலைக்கு கணவனை இழந்த மகள் உரிமை கோரலாம்: அலகாபாத் ஐகோர்ட்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Alagabath 2024-11-25

Source: provided

 

லக்னோ: கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து