முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனா கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Takare 2024-11-25

Source: provided

 

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வாகியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 3 தினங்களுக்கு முன் வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை கண்டது. சுமார் 95 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில்  வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சியின் இரு அவைகளின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே, மாநிலங்களவைக்கு கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைக் கொறடாவாக சுனில் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

வோர்லி  தொகுதியில் கடந்த முறை 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆதித்யா தாக்கரே இந்த முறை வெறும் 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அவரது வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து