முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-11-27

வாஷிங்டன், அமெரிக்க தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார். 

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.  இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமித்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா என்பவர் நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.  அமெரிக்காவை மீண்டும் சுகாதார நாடாக பட்டாச்சார்யா மற்றும் அவருடைய குழுவினர் உருவாக்குவார்கள் என டிரம்ப் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக ஜெய் பட்டாச்சார்யாவை நியமிப்பதில் நான் உற்சாகமடைகிறேன்.  தேசத்தின் மருத்துவ ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளவும், சுகாதார மேம்பாடு மற்றும் உயிர்கள் காக்கப்படுதல் ஆகியவற்றில் முக்கியம் வாய்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான பணியிலும் ராபர்ட் எப். கென்னடி ஜூனியருடன் இணைந்து ஜெய் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  அறிவிப்புக்காக டிரம்புக்கு, ஜெய் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டார்.  ராபர்ட் எப். கென்னடி ஜூனியரை இந்த வாரத்தில், ஜெய் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தேசிய சுகாதார மையத்தின் உருமாற்றம் பற்றிய தன்னுடைய கருத்துகளை கூறி அவரின் பாராட்டுகளை பெற்றார்.  

இந்த மையத்தின் சீர்திருத்தம் பற்றிய தன்னுடைய தொலைநோக்கு பார்வையை குறிப்பிட்டு, முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டிய விசயங்களையும் எடுத்து கூறினார்.ஜெய் பட்டாச்சார்யா, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் சுகாதார கொள்கைக்கான பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  

இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள், பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் சுகாதார கொள்கைக்கான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் நெருக்கடியான கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல முக்கிய கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பணியாற்றியவர்.  

1968-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் பிறந்த இவர், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி. மற்றும் பிஎச்.டி. படிப்பையும் முடித்திருக்கிறார். டிரம்பின் அமைச்சரவையில், கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி இடம் பெற்றிருக்கிறார்.  

எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார்.  இதேபோன்று, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினரான, முதல் இந்து பெண்ணான துளசி கபார்டும் டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து