முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
Hemant-Soran 2024-07-08

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று 28-ம் தேதிபதவியேற்க உள்ளார். 

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். 

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட இண்டியா  கூட்டணி தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கேற்க உள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வென்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக 21 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. 

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் பெரும் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இன்று ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார். 2013-ம் ஆண்டு முதன் முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். 

2019-ம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் வென்று முதல்வரானார் ஹேமந்த் சோரன். பின்னர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

அப்போது இடைக்கால முதல்வராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். 

இந்த நிலையில் தற்போது தேர்தலில் மீண்டும் வென்று 4-வது முறையாக மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். முன்னதாக ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனா சோரனுடன் நேற்று முன்தினம் தலைநகர் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அவர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரை சந்தித்து பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து