முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கானை விடுவிக்கக் கோரி நடந்த பேரணியில் மோதல் 6 பேர் உயிரிழப்பு: இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      உலகம்
Imran-Khan-3

இஸ்லாமாபாத், இம்ரான்கானை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் கடந்த 24-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு கடந்த 13-ம் தேதி அவர் அழைப்பு விடுத்திருந்தார். 

பொதுமக்களை காரணமின்றி கைது செய்தல், 26வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் கடந்த 25-ம் தேதி பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே சிறையில் உள்ள இம்ரான் கானை விடுவிக்கக் கோரி கட்சி தொண்டர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி சென்றனர். இதையடுத்து நகருக்குள் செல்லும் பாதையை பெரிய கண்டெய்னர்களை வைத்து அடைத்ததுடன் நகரை சுற்றி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

ஆனாலும் தடைகளை மீறி போராட்டக்காரர்கள் நகரை நோக்கி முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சியினருக்கும் மோதல் வெடித்தது. பல போலீசார் சிறைபிடிக்கப்பட்டனர். 

இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் தாக்கியதில் 3500 தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து