எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: தனது பதவியேற்புக்கு முன்பு பணயக் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக் குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடக்கம். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. அதே வேளை, தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டு விட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே போல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக் குழு நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால், ஹமாஸ் ஆயுதக் குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப் கெடு விதித்துளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். அதிபராக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்பு பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும்.
அவ்வாறு பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நான் அதிபராக பதவியேற்க உள்ள ஜனவரி 20-ம் தேதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதிபராக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.