எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிப்புகளை மதிப்பீடு செய்ய உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கூறியதாவது, "பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா, மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்க வேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.