முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      இந்தியா
Eknath-Sindey 2024-12-03

Source: provided

 

மும்பை: தொண்டை வலி  மற்றும் காய்ச்சல் காரணமாக ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையிலும் புதிய அரசு அமைக்கப்படாமல் உள்ளது. புதிய அரசின் பதவி ஏற்பு விழா வருகிற 5-ம் தேதி நடக்கும் என பா.ஜ.. அறிவித்துள்ளது.

இதில் பா.ஜ..வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

முதல்வர் பதவி கேட்டு அடம் பிடித்த ஏக்நாத் ஷிண்டே, அது கிடைக்காவிட்டால் முக்கிய இலாக்காக்கள் வேண்டும் என்று கேட்டதாக சொல்லப்பட்டது. இதனால், புதிய அரசு அமைவதில் இழுபரி ஏற்பட்ட நிலையில் , ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர்  பதவியேற்க சம்மதம் தெரிவித்ததாக மராட்டிய அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நாளை  பதவியேற்பு விழா நடைபெறும் என்று பா.ஜ..  அறிவித்து இருக்கும் நிலையில்,  ஏக்நாத் ஷிண்டே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி,  காய்ச்சல் காரணமாக   அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, பிரச்சினை எதுவும் இல்லை என கூறி விட்டு சென்றார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து