முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
mettur 2024-12-03

Source: provided

 

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. அதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. 

நேற்று முன்தினம் விநாடிக்கு நீர்வரத்து 7,414 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 110.93 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 9,246 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து, 111.39 அடியாக இருக்கிறது. 

அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் விநாடிக்கு 300 கன அடி நீர் வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.

இதே போன்று காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5,500 கன அடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து