முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவு நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை எடப்பாடி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

 

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நாளை சென்னையில் உள்ள அவரது  நினைவிடத்தில் அ.தி.மு.. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை 5-ந் தேதி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்கிறார்கள். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அன்னதானம் வழங்குகிறார்கள். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து