எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: மராட்டிய முதல்வரை தேர்வு செய்யும் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும், புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரபூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், பா.ஜ.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று காலை நடைபெறும் என்றும் அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
மும்பை விதான் பவனில் இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகர் பா.ஜ.க. பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர் மாநிலத்தின் முதல்வராக நாளை 5-ம் தேதி பதவியேற்பார். பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக மும்பை பா.ஜ.க. தலைவர் ஆசிஷ் ஷெலார், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த மைதானத்தில் அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை கூட முடியும். மைதானம் முழுமையாக நிரம்பும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது.
இவ்விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என்றும், அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்பார்களா என்பது குறித்து பா.ஜ.க., சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, மராட்டிய சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் டிசம்பர் 7-9 தேதிகளில் நடைபெறும் என்றும் அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்றும் இதையடுத்து குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.