எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி: அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தி.மு.க. உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் பங்கேற்று பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அதே சமயம் இண்டியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.