முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 23,000 கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க தடை

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Okenakal 2024-12-03

Source: provided

 

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை அளவீட்டின் போது நீர்வரத்து 5,500 கனஅடியாக பதிவானது. இந்நிலையில் நேற்று  காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது.

தொடர்ந்து, காலை 8 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் 9 மணி அளவீட்டின்போது 23 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.  ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து