முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59: புவி வட்டப்பாதையில் 'புரோபா-3' செயற்கைகோள்கள் நிலைநிறுத்தம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      தமிழகம்
PSLV 2024-12-03

Source: provided

சென்னை:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59. சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்களும் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நேற்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அது சரிசெய்யப்பட்டு நேற்று மாலை ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது செயற்கைக்கோள்களை அவற்றின் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தி உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், "இந்தியாவின் 61-வது பி.எஸ்.எல்.வி. சி. திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் செயற்கைக்கோள் விண்ணில் சென்றது. பி.எஸ்.எல்.வி. சி. 60 ராக்கெட் நடப்பு மாதத்தில் ஏவப்பட்டுள்ளது. தொழிநுட்ப முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பி.எஸ்.எல்.வி. என்றாலே வெற்றி என்பதை உலக தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு இன்றைய (நேற்றைய) நிகழ்ச்சி சான்றாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து