முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

அமேதி: இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் நேற்று வந்துகொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணித்த தவுகித் என்ற 24 வயது வாலிபருக்கும், சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தவுகித்தை இரும்பு கம்பி, கத்தி ஆகிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். லக்னோ-நிகல்கர் ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது.,  அமேதியின் மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித், அம்பாலா சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது அவருக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக மாறியது. இளைஞர்கள் தவுகித்தை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து சரிந்த தவுகித் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு, தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த நிலையை கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன தவுகித்தின் சகோதரர்கள் தாலிப் (வயது 20), தவுசிப் (வயது 27) ஆகிய இருவரும் நிகல்கர் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர். அவர்கள் வந்ததும் அவர்களையும் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகள் சுல்தான்பூர் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து