முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகர் டெல்லி நோக்கி பேரணி: விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Farmers-Protest-2024-12-06

தலைநகர் டெல்லி நோக்கி பேரணி:  விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு 

புது டெல்லி, டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், மின்சார மானியம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு விவசாயிகள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு நியாயம் வழங்க வலியுறுத்தியும் ஜத்தா பகுதி பஞ்சாப் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி நேற்று மதியம்  பேரணி சென்றனர். 

 இதனால் டெல்லியில் கடுமையான நெரிசல் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி போலீசார் விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிட்டனர். டெல்லியில்  முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தனர். விவசாயிகள் திரண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். 

அரியானா மாவட்ட போலீசாரும் இப்பேரணிக்கு அனுமதி வழங்காத நிலையில் விவசாயிகள் பேரணி செல்ல இருந்ததால் அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.  அப்போது, டெல்லி எல்லையில் ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவலர்களின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், விவசாயிகளின் போராட்டத்தை டிரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

தற்காலிகமாக நிறுத்தம்

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சம்யூக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சேவை நிறுத்தம்

விவசாயிகள் பேரணி எதிரொலியாக அரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் செல்போன் இணையசேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றை வரும் 9ம் தேதி இரவு 11.59 மணி வரை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. விவசாயிகள் பேரணியால் பதற்றம், கிளர்ச்சி மற்றும் பொது அமைதிக்கு இடையூறு என்ற அச்சம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து