முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      தமிழகம்
Villupuram-Central-team--20

விழுப்புரம், விழுப்புரத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை இணை இயக்குநர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.மழை சேத நிலவரம் குறித்து அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கேட்டறிந்தனர். விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை சேதம் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் விளக்கினர்.

14 மாவட்டங்களில்...

பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புயல் பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். மேலும் மத்திய அரசின் பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

முதல்வருடன் சந்திப்பு....

இதையடுத்து தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்திய குழுவினர் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கூறி அதற்கான முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அவர்களிடம் அளித்தார். மேலும், விரைந்து பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இந்நிலையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். புயல் காரணமாக பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. மழையால் நெல்மூட்டைகள் சேதமடைந்தது குறித்து மத்திய குழுவிடம் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வருவாய்த்துறை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து