முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் இன்னிங்சில் ஆஸி. 337 ரன்களில் ஆல் அவுட் : 2-வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

அணியில் மாற்றம்...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.

இந்தியா பேட்டிங்...

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸி.க்கு நெருக்கடி...

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வினியின் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் பும்ராவின் பந்துவீச்சில் 39 ரன்களில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் 2 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 2-வது நாளின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.

டிராவிஸ் ஹெட் சதம்... 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். அவருக்கு மறுமுனையில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். 111 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியா திணறல்....

இதனையடுத்து, 157 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 28 ரன்கள், கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 29 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெட் - சிராஜ் வாக்குவாதம்

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த 4-வது பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

சிராஜ் அதிவேக பந்துவீச்சு ?

இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 25-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 5-வது பந்து 181.6 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டதாக காட்டப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிராஜ் கிரிக்கெட்டில் அதி வேகமாக பந்து வீசியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தின் வேகம் அவ்வாறு காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக பந்து வீசியவர்களின் சாதனை பட்டியலில் 161.3 கி.மீ. வேகத்துடன் சோயப் அக்தர் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து