முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடா? - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      தமிழகம்
CV-Shanmugam 2023 06 13

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு எங்கே இருக்கிறது என்று சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:- புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம், அம்மா அரசு இருக்குமா? இருக்காதா? என்ற நிலையிலே, அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு சோதனையான காலக் கட்டத்திலே இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற ஒரு தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அம்மா ஆட்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்று 4.5 ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு எடப்பாடியார் அரசாகும்.

அதற்கு பிறகு இந்த இயக்கத்திலே எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளால், பல்வேறு சோதனைகள் வந்தது, பிளவுபட்டது. சின்னம் முடக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அதை எதிர் கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் எக்கு கோட்டையாக அ.தி.மு.க. கழகம் இன்று இருப்பதற்கு முழு காரணம் ஆளுமை மிக்க நம்முடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மை தோற்கடிப்பதற்கு எவனும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கைத்தான் நம் வெற்றிக்கு முதல்படி. அந்த நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு நம் மீது மறைமுகமாக, நேரடியாக தாக்குதல்கள் நடத்தி கொண்டி ருக்கிறார்கள். 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க. அன்றைக்கு இந்த எடப்பாடியார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே எழுச்சி அதே ஆரவாரத்தோடு இன்றைக்கும் இருக்கிறது.

காது இருந்தும் கேட்காத செவிடர்களுக்கும், கண் இருந்தும் பார்க்காத குருடர்களுக்கும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மண்டபத்தில் நிரம்பி இருக்கிற இந்த தொண்டர்களை பாருங்கள். இங்கே எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? எங்கிருக்கிறது சலசலப்பு? சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இங்கே பாருங்கள். இந்த எழுச்சியை பாருங்கள்... இதுதான் 2026-ல் நம்முடைய அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும்... அமையும். நம்முடைய பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க. தொண்டனுடைய பலம் தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டன் இருக்கிற வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பன் மட்டுமல்ல 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. நம்பிக்கையோடு, எழுச்சியோடு, உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றி நம் அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையிலே அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து