முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1971 பாக்., போரில் இந்தியா வெற்றி: வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Throwbathi 2024-12-16

Source: provided

புதுடெல்லி: 1971 பாக்., போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர்.

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. முன்னதாக நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் துணிச்சலைப் போற்றி உள்ளனர்.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி பெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த போரில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. பாகிஸ்தான் படைத் தளபதி ஜெனரல் அமிர் அப்துல்லா கான் நியாசி, 93 ஆயிரம் படையினருடன் இந்தியாவிடம் சரணடைந்தார். இந்தியாவின் கிழக்கு கமாண்டோ பிரிவு தலைவர் ஜெ.எஸ். அரோரா முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான படையினருடன் சரணடைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்படுகிறது.

இந்த வெற்றியை அடுத்து, கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக தனி நாடாக உருவெடுத்தது. இந்த போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,843 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். 9,851 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் வெற்றி பெற்ற இந்த தினம் வெற்றி தினம் (விஜய் திவஸ்) என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "1971 போரின்போது, ​​இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த நமது வீரம் மிக்க வீரர்களுக்கு இந்த வெற்றி தினத்தில் நான் மரியாதை செலுத்துகிறேன். தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருக்கும் நமது துணிச்சலான ராணுவத்தினரின் தியாகத்தை நன்றியுள்ள தேசமாக அதனை நினைவில் கொள்கிறது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாம் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நம் தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் பெருமை சேர்த்தது. இந்த நாள் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத உறுதிக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் தியாகங்கள் என்றென்றும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். அதோடு, நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து