முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
Whether 2024-12-16

Source: provided

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை அடையும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வான வலுப்பெறுவதிலும், புயலாக மாறுவதிலும் போக்கு காட்டியது. கடைசியில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்து புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை.

இந்த நிலையில், தெற்கு வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் நேற்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை அடையும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் சூறாவளி சுழற்சி கடல்மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ. வரை நீண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து