முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்த நாள் விமர்சனம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      சினிமா
Anta-na--vimarca-am 2024-12

Source: provided

நாயகன் ஆர்யன் ஷாம், தனது புதிய திரைப்படத்தின் கதை விவாதத்திற்காக இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் ஈசிஆரில் உள்ள பஞ்சமி பங்களாவுக்கு செல்கிறார்.

இரவு நேரத்தில் அந்த இடத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சிக்க, ஒரு முகமூடி மனிதன் கொடூர ஆயுதத்துடன் அவர்களை விரட்டுகிறான். யார் அது? அந்த வீட்டில் சிக்கிக்கொண்ட ஆர்யன் ஷாம் மற்றும் அவருடன் சென்றவர்கள் தப்பித்தார்களா? இல்லையா?, என்பதை திணறடிக்கும் திகிலோடு சொல்லும் படம் தான் ‘அந்த நாள்’. ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பலம் வாய்ந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் நாயகன் ஆர்யன் ஷாமுக்கு வாழ்த்துக்கள்,

முதல் படத்திலேயே எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்து கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு சரியான முறையில் பயன்பட்டிருக்கிறார்கள்.

சிறந்த இசைக்காக ராபர்ட் சற்குணத்தைப் பாராட்டலாம்.  நரபலியை மையமாக வைத்து உருவான இப்படத்தை தயாரிப்பாளரான நாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் மொத்தத்தில், திகில் அனுபவத்தைக் கொடுக்கும் ‘அந்த நாள்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து