முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
E V Velu 2024-12-16

Source: provided

மதுரை: திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.

ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது. 2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை. எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து