முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை காரையார் அணை நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      தமிழகம்
Kaaraiyaar-Dam 2024-12-15

Source: provided

நெல்லை: நெல்லை காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் 143 அடி உயரம் கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சுமார் 12 அடி உயர்ந்து 96.8 அடியை எட்டியுள்ளது.

அணைக்கான நீர்வரத்து 3,983 கன அடியாக உள்ளது. இதேபோல், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 96.84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து 4,913 கன அடியாக உள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதால், இரு அணைகளின் நீர்மட்டமும் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து