முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் சென்னை விமர்சனம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      சினிமா
South-Chennai-Review 2024-1

Source: provided

இந்திய கப்பல் படையில் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரங்கா, தனது அப்பா தொடங்கிய உணவகத்தை தனது மாமாவுடன் இணைந்து நடத்துகிறார். 

அவரது மாமா செய்த ஒரு தவறால் அந்த உணவகம் அவர்களிடம் இருந்து கைமாறி  வில்லன் நித்தின் மேத்தாவிடம் போகிறது. அவன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும்  பணத்தை அந்த உணவகத்தில் வைக்கிறான்.  இந்த நிலையில், இப்பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடிக்க திட்டமிடுகிறது.

கொள்ளையடிக்க முயற்சிக்கும் கும்பலின் மூளையாக செயல்படும் நபர் யார்? என்பது தான் ‘தென் சென்னை’ படத்தின் கதைக் கரு. முதல் படத்திலேயே நடிப்பு, தயாரிப்பு இயக்கம் என மூன்று பணிகளை தூக்கி சுமந்திருக்கும் ரங்கா, மூன்றையும் அழகாக சமாளித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் நித்தின் மேத்தா, ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் சரத்குமார்.எம், இசையமைப்பாளர்கள் சிவா பத்மயன் மற்றும் ஜென் மார்டின் ஆகியோர் கதைக்கு ஏற்ப அருமையாக பணியாற்றியிருக்கிறார்கள். இப்படம் திரில்லர் ஆக்‌ஷன் ஜானர் கதை என்றாலும், திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ‘தென் சென்னை’ நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து