முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயோட்டே தீவை தாக்கிய புயல்: ஆயிரத்தை தாண்டும் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      உலகம்
Mayottaa 2024-12-16

Source: provided

மயோட்டே: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று முன்தினம் சிண்டோ என்ற புயல் தாக்கியது.

கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மயோட்டே புயல் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மிக சக்திவாய்ந்த சூறாவளியாக மயோட்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பாதிப்பில் சிக்கி பல நூறு பேரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார். அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறும் போது, "பாதிக்கப்பட்டவர்களை கண்கெடுப்பது கடினமாகவே இருக்கும். தற்போதைய சூழலில் உறுதியான எண்ணிக்கையை கூற முடியாது," என்று தெரிவித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து